காரைநகர் பிரதேச சபையில் 2023/2024 ஆம் ஆண்டுகளில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் இறுதிக் கலந்துரையாடல் இன்று (ஒக்ரோபர் 6) மதியம் 2:00மணியளவில் சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் அபிவிருத்தித் திட்டங்கள்
* பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள்.
*நீடித்து நிலைத்திருக்கும் எண்ணக்கருவுடனான திட்டம் வகுப்பு.
*சூழல் சார் பாதுகாப்பு திட்டங்கள்.
ஆகிய எண்ணக்கருவினை பிரதான நோக்காக கொண்டு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு தங்கள் சார்பான நியாயபூர்வமான கருத்துக்களை முன்வைத்ததுடன் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தனர்.
இவ் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பங்கேற்பு மூலம் இறுதி செய்யப்படுதால் பூரண இலக்கினை ஈட்டுவதாக அமையும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.