காரைநகரில் 101 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் சம்பலோடை கரையோரப் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 101 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கரையோரப் பகுதிகள் ஊடாக பல்வேறு வகையான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையிலேயே காரைநகர் சம்பலோடை கரையோரப் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 சாக்கு மூட்டைகளை சுமார் 101 கிலோ மற்றும் 750 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள 15 கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

Share this Article
Exit mobile version