மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவான டெங்கு ஓழிப்புச் செயற்பாடு காரைநகர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் வாரம் காரைநகர் பிரதேசத்தில் டெங்கு தணிப்பு செயற்பாட்டிற்கான பொது அறிவித்தல் வழங்கப்பட்டு டெங்கு பெருகும் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் களவிஜயம் மூலம் வீடுகள், கடைகள், பொது இடங்கள், அலுவலகங்கள் என்பன சோதனை இடப்பட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகின்றது.
இக் களத்தரிப்பு செயற்பாடு நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 18) கடைகள் மற்றும் அரச அலுவலகங்கள் என்பன சோதனையிடப்பட்டன.
இவ் செயற்பாட்டில் காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர் இணைந்து களத்தரிப்பு மேற்கொண்டு டெங்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.