ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எழுவைதீவு உப அலுவலகத்தால் இன்று (ஜூன் 2) கரையோர பகுதிகளில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் செயற்திட்டம் காலை 9.00 மணி தொடக்கம் 11.30 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தச் செயற்பாட்டுக்கு எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் முழுமையான அனுசரணை வழங்கியிருந்தனர்.
இக் கழிவகற்றும் செயற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேசசபை அலுவலர்கள், ஊர்காவற்துறை பிரதேச செயலக அலுவலர்கள், யாழ் மாவட்ட செயலக கரையோரப் பாதுகாப்பு அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் வைத்து வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றல் வாரத்திற்கு ஒரு தடவை படகு சேவை சங்கத்தில் இலவச போக்குவரத்து மூலம் தீவைவிட்டு கொண்டு செல்வதும் குறிபிடத்தக்கது.