யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற முன்னாய்த்த கூட்டத்தில், எழுவைதீவு மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக, பழுதடைந்த நிலையில் உள்ள எழுதாரகை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
கப்பலை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பான இடத்தில் கப்பலை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமு் என்று வடக்கு மாகாணத்திற்கான கடற்படை தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய எழுதாரகை கப்பல், எழுவைதீவு இறங்குதுறை பகுதியில் இருந்து இன்று கடற்படையினரால் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.