காரைநகர் கசூரினா கடற்கரையில் உயிர்காப்பு கண்காணிப்பு மையத்தினை அமைப்பதற்கான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(டிசம்பர் 8) கடற்படை அதிகாரிகளுக்கும் சபையின் செயலாளர் உள்ளிட்ட திட்ட அமுலாக்க பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்றது.
இவ் மையம் சுற்றுலாவிகளின் பாதுகாப்பான கடற்குளியல் செயற்பாட்டிற்கு மிக அவசியமாக இருப்பதால் விரைவாக அமைப்பது மற்றும் சாத்திய வள பொறிமுறை தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் மூலம் பாதுகாப்பான கடற்குளியல் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியினை ஏற்படுத்தி சபையின் வருமானத்தினை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.