ஊர்காவற்துறை பிரதேசசபை – எழுவைதீவு உப அலுவலகத்திலுள்ள உழவு இயந்திர வாடகை மூலமான வருமானம் அதிகரித்துள்ளது.
அண்மையில் இவ் உழவு இயந்திரத்தினை ஊர்காவற்றுறை பிரதேசசபையினர் வருமானமின்மை காரணமாக மீளப்பெற முனைப்பாக முயற்சி நடைபெறுவதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் பிரதிபலிப்பாக இம்மாதம் இவ் உழவு இயந்திரத்தை வாடகைக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்தவாரம் உழவு இயந்திரத்தை மீண்டும் ஏற்றுவதற்கான கேள்விகோரல் எழுவைதீவு படகு உரிமையாளர்களிடம் கோரப்பட்ட போதும் படகு உரிமையாளர்கள் ஏற்றமறுத்துள்ளனர். இதனை அடுத்து கேள்விகோரல் மீளப்பெறப்பட்டது.
இவ் வாகனத்திற்கென நிரந்தர சாரதி அனுப்பப்பட்டால் குடி நீர் சேவை , வாடகை சேவை என்பனவற்றை இலகுவாக்க முடியும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.