நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழு கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கடந்ந இரண்டு வாரங்களாக கல்வி நடவடிக்கைகளை தாங்கள் புதிதாக ஆரம்பித்த அலுவலகத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது.
மாணவர்களது கல்வியினை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்களை ஈடுபடுத்தும் நோக்குடனும், கல்வி கற்கும் மாணவர்களது பெற்றோர்களை அழைத்து பெற்றோர் சந்திப்பு நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 09) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகரும் ஆசிரியருமாகிய திரு.எ.எவ்.ஜேக்கப் அவர்களும், செயலாளர் இணைப்பாளர் ஆகியோர் இணைந்து கொண்டு தங்கள் கல்வி செயற்றிட்டம் தொடர்பாகவும் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டதுடன், மாணவர்களது கல்வியில் பெற்றோர்கள் பங்களிப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
கல்வி அபிவிருததி செயற்பாட்டின் முதற்கட்டமாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடடிவக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கல்விக்கு உறுதுணையாக பாட சம்பந்தமான புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூலக வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் இன்ரனெற் வசதியுடன் கூடிய கணணி வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக குறிப்பிட்ட முக்கிய வகுப்பக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், சிறிய நூலக வசதி, இன்ரனெற் வசதியுடன் கூடிய கணணி வசதி, கரம் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டு வசதிகள் என்பனவும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.