புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பில் STF அகழ்வு !!!

SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்புவவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடாபகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும்தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (செப்.29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,

 இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது. அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர்நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமமூலம் அகழ்வுப் பணியைமுன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகல்லடி விசேடஅதிரடிப்படை பொறுப்பாளர், பிரதேச கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகஉத்தியோகத்தர்தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில்அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரைமேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனதெரிவிக்கப்படுகிறது

இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேடஅதிரடிப்படையினர் வெளியேறினர்.

Share this Article
Exit mobile version