தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் நாளை சனிக்கிழமை (18.01.2020) நடத்தவுள்ளனர்.
ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்தும் தைப்பொங்கல் விழா 10 வது ஆண்டாக ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளது.
ஹரோ நகரசபை அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பாரம்பரிய நடனங்கள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன. நிகழ்வில் பெருமளவிலான ஹரோ வாழ் தமிழ் மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பல்லின மக்கள் வாழும் ஹரோ நகரத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையில் தமிழ் மக்கள் 3 வது இடத்திலுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.