குமுதினிப் படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று
1985.05.15 அன்று நெடுந்தீவில் இருந்து காலையில் 72 பயனிகளுடன் குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினிப்படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை என்ற போர்வையில் வெட்டியும் குத்தியும் சுட்டும் கொடுரமான முறையில் 36 பேர் கொல்லப்பட்டதுடன் 36 பேர் காயமடைந்து உயிர் பிழைத்துக் கொண்டனர்.
நெடுந்தீவின் வரலாற்றில் மறக்க முடியாத கொடுரமான நீலக்கடல் சிவந்த நாள் இன்று இக்கொடுரமான நிகழ்வு நடந்த மறக்க முடியாத துன்பியல் நிகழ்வுகளின் 36வது ஆண்டு நினைவு தினமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இன்றைய தினம் நெடுந்தீவில் இவ் அஞ்சலி நிகழ்வுகளோ அல்லது நினைவு ஆராதனைகளோ நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஆயினும் உறவுகள் சிலர் இன்றைய தினம் நேரடியாக சென்று மலர் சாற்றி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
குமுதினிப்படகு துன்பங்கள் சுமந்த போதும், 45வருடங்கள் கடந்தும் இன்றும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது குமதினிப்படகு எம் தீவக மக்களின் நினைவழியா சொத்தாகும்.