பொலநறுவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சனிக்கிழமையே பொலநறுவையில இருந்து வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை அவருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகும் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.