ஐந்து அணிகளை உள்ளடக்கிய எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்று(4) இரவு எட்டு மணிக்கு யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்க்ஸ் அணி களத்தடுப்பைத் தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாண அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
யாழ்ப்பாண அணியின் இன்றைய(4) போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வி.வியாஸ்காந்த் (சுழற்பந்து வீச்சாளர்) விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் அவருக்கு இது முதல் போட்டியாகும்.
வட, கிழக்கு மாகாணத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் பிரதிபலிப்பாக வியாஸ்காந்த் இன்றைய(4) போட்டியில் களமிறங்குகிறார்