இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை (19) அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.