கொரோனா இடர்காலத்தில் அரசால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தில் இரண்டு சமுர்த்தி அலுவலர்கள் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் கைதடி வடக்கு சமுர்த்தி அலுவலரும், வல்வெட்டித்துறை சமுர்த்தி வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அலுவலர் இருவருமே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் சமுர்த்தி திணைக்கள கணக்காய்வு பிரிவு விசாரணைகளை நடத்தியது.