ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இஸட்’ மதிப்பெண்ணின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட மாட்டார்கள் எனவும் கல்விப் பொதுத்தர உயர் தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான காணிகளை மதீப்பிடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் வருடத்தின் இறுதிப் பகுதியில் பல்கலைக்கழக கட்டுமாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.