Thursday, December 1, 2022

12 வயதுடைய தமிழ் சிறுமிகனடாதீவிபத்தில் பலி

Must Read

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதுடைய தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து நேற்று முந்தினம்  ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சிறுமியின் தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பூதவுடல் Sunday, 02 Aug 2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img