புங்குடுதீவு, வேலணை, மண்கும்பான், மற்றும் மண்டைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசங்களில் சொந்தமாக்க் காணிகள்
உள்ளோரின் கவனத்திற்கு
(வீட்டுக்காணி. வயல்காணி. தோட்டக்காணி. பனம் காணி.தென்னம் காணி.வெறும் காணி. தரிசுக் காணி பற்றைக் காணி ) உங்கள் காணிகளின்
விபரங்கள் அந்தந்த கிராம சேவை அலுவலகர்களினால் (காணிகள் உள்ள அந்தந்த கிராம சேவை அலுவலகர் பிரிவுகளில்) தரவுகள் பதியப்படுகிறது.
எனவே உங்களின் காணிகளின் விபரங்களை உடனடியாக பதிவுகளை அந்தந்தக் கிராமசேவை அலுவலர்களிடம் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு உங்கள் காணிகளைப் பதிவு செய்யுங்கள்.
பதிவுக்கான இறுதி நாள் 2020 நவம்பர் 30 ம் திகதியாகும்.
இத்தகவல்களை புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் கவனத்தில் எடுங்கள் அதே போன்று வேலணைக்கு வெளியே (இலங்கைக்குள்) வசிக்கின்ற புங்குடுதீவு உறவுகளும் இத் தகவல்களை கவனத்தில் எடுங்கள்.
தொடர்பு கொண்டு பதிய முடியாதவர்கள் இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மூலமாக புங்குடுதீவில் உள்ள கிராம சேவை அலுவலகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, காணிப்பதிவுகளை மேற்கொள்ளூங்கள்.
இத்தகவல்களை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .
கிராம சேவை அலுவலகருடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் அந்தந்த கிராம சேவை அலுவலகர்களின் விபரமும் தொலைபேசி இலக்கங்களும் பிரதேச செயலாளர்மற்றும் யாழ்மாவட்ட செயலாளரின் அலுவலகதொலைபேசி இலக்கங்களும் இங்கு உள்ளது.தேவையானவர்கள் அவர்களுடன் தொடர்பை பேணிவிளக்கங்களைக் கேட்கலாம்.