வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கோவிட் -19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.
அந்தப் பிரிவு இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்