யாழில் எழுபது வயது வயோதிப பெண்மணிக்கு கொரோன தொற்று இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதிஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது உறவினரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்து வருகை தந்தவ இவர் வான் மூலம் கிளிநொச்சிக்கும் சென்று வந்ததாக தெரியவருகின்றது.
அவர் கொழும்பில் இருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் சுகாதாரத் துறையினர் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் இன்று யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்டது அதில் அவருக்கு கொரோன தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவரது வீட்டில் உள்ள அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நாட்களில் அவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேறகொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.