நெடுந்தீவு குறிகட்டுவான் படகுச்சேவையான குமுதினிப் படகு மிக விரைவாக நான்கு சேவைகளாக இடம் பெறும் எனத்தெரிவிக்கபடுகின்றது கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பின்னர் காலையில் 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படுகின்றது.
ஆயினும் நேற்றைய நாளில் (ஜீலை 02) திகக அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்போர் அதிகமாக காணப்பட்டமையால் காலை 09.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்பட்டு மதியம் 02.30 மணிக்கு மீளவும் நெடுந்தீவில் இருந்து புறப்பட்டது
இது தொடர்பாக வீதிப்போக்குவரத்து அதிகார சபையுடன் தொடர்பு கொண்ட போது மிக விரைவாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கொரோனா தாக்கத்திற்கு முன் இடம் பெற்றது போல் ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் 04 சேவைகளாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்கள்