மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று (நவம்பர் 14) மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சர்வின் (வயது-06) மற்றும் இராசகுமார் மிர்வின் (வயது-05) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.
அண்மையில் பெய்த மழை நீர் வயல் கேணிக்குள் நிரம்பியிருந்த நிலையிலேயே அதில் தவறி விழுந்து குறித்த சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு சிறுவர்களும் தந்தையுடன் வயலுக்குச் சென்ற நிலையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.