இலங்கையில் வாய்ப்புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டுமே 33,000க்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயால் கடந்த வருடத்தில் 19,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை இலங்கையில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் முக்கியமான மரணங்களாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்களிடையே வாய்ப்புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, 100,000 பேரில் 1,990 பேர் இதனால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் புற்றுநோயின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும், புற்றுநோய் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்தார்.