அரச பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களைப் பகிடிவதை, சித்திரவதை செய்தது நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கறுப்புப்பட் டியலில் சேர்க்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இதன்படி, குற்றவாளிகளை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், அவர்களின் பட்டங்களை ரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரசில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க சட்டத்தரணிகளின் உதவியைப்பெறுவோம்.
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்வது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களே போதுமானவை.
பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்களுக்கு பல்கலைக் கழகங்கள் திறந்திருக்க வேண்டும்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை சித்திர வதைக்கு உட்படுத்திய மாணவர்கள்ளுக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த 11 மாணவர்களை தாக்கியமைக்காக கலைப் பீட மாணவர்கள் மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் – என்றார்.