யாழில் கடந்த 2017ம் ஆண்டு நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர உயிரிழந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,
மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் மாதாந்தம் அவர் வாக்களித்த பணத்தினை மனிதாபிமான ரீதியில் வழங்கி வருவதாகவும், அவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக மோட்டார் வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு, அதற்கான மாதாந்த தவனைப் பணம் நீதிபதியினால் அனுப்பி வைக்கப்படுகின்றது என
சிங்கள ஊடகம் தெரிவிக்கின்கிறது .
மெய்ப்பாதுகாவலரின் இறப்பையும் கடந்து மனிதாபிமான ரீதியில் நீதிபதி இளஞ்செழியன் செய்து வரும் உதவிகள் தமிழ் மக்களுக்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.