அலைகடல் நடுவில் அமர்ந்து ஆட்சி புரியும் அன்னை நயினாதீவு நாகபூஷணி அம்பாளுக்கு தினசரி பூசைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 5.30 மணிக்கு ஆலய கதவுகள் திறக்கப்பட்டு ஆயத்தமணி நடைபெறும்.
காலைப் பூசை காலை 7.00 மணிக்கு, உச்சிக்காலப் பூசை மதியம் 12.00 மணிக்கு, சாயரட்சை பூசை மாலை 5.30 மணிக்கும், இரத்தசாப்புப் பூசை மாலை 6.00 மணிக்கும் நடைபெறும் என்று ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.
