தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று காலை (ஜீலை 13) மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்தார். மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றனுடன் கலந்துரையாடினார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் உரிய அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன் பாரளுமன்ற தேர்தலில் வாக்கு வீதத்தினை அதிகரிக்கும் முகமாக மாதர் அபிவிருத்தி சங்கத்தினரால் நடாத்தப்பட்ட வீதி நாடகத்திலும் கலந்து கொண்டார்.