தமிழக தேர்தல் ஒரு பார்வை..
ந.லோகதயாளன்.
தமிழ் நாட்டு சட்ட மன்றத் தேர்லில் தி.மு.க வெற்றியீட்டியதாக கூறினாலும் உண்மையில் வெற்றியீட்டியவர்களை கூறினால் தமிழ் நாட்டின் எதிர் கால ஆபத்தை உணரமுடியும்.
தமிழ் நாட்டிற்கான 16 வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021-04-06 அன்று இடம்பெற்று 2021-05-02 அன்று எண்ணப்பட்டது. இதில் தி.மு.க பெரு வெற்றியீட்டி 6வது தடவை ஆட்சியை பிடீத்துள்ளது. கண்டிப்பாக தி.மு.க கூட்டணி அல்லது அ.தி.மு.க கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் நிலமைதான் தமிழ் நாட்டில் நிலவியது. இங்கே தற்போது இரு கட்சிகளும் எடுத்த ஆசணங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.்அதாவது 6,28,68 955 வாக்காளர்களைக் கொண்ட தமிழ் நாட்டில் இடம்பெற்ற தேர்தலின் எதிர்காலம் ஆபத்தினை நோக்கியே நகரும்.
தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இரு திராவிடக் கட்சிகளும் இரு தேசிய கட்சிகளை வளர்த்து விடும் பணியை கட்சிதமாக மேற்கொண்டுள்ளனர். அதன் பிரகாரம் தி.மு.க கூட்டணி காங்கிரசிற்கு 15 ஆசணத்தையும் அ.தி.மு.க பா.ஜ.கவிற்கு 4 ஆசணத்தையும் வாங்கி கொடுத்து தமிழ் நாட்டு மக்கள் விரும்பாத தேசிய கட்சிகளிற்கு 19 ஆசணங்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கினைப் பெற்றவர்.
தமிழ் நாட்டை ஆழத் தெரியாதவர் என்றவரையில் எள்ளி நகையாடிய முன்னாள் முதல்வரே தமிழ் நாடு சட்ட மன்றத் தேர்தலிலேயே அதிக வாக்குகளைப் பெற்றதோடு அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றியீட்டியுள்ளார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி இராம்மூர்த்தி.
ஒரு கோடியே ,63 லட்சத்து 154 வாக்குகளைப் பெற்றது மண்டுமன்றி 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றியீட்டியுள்ளார்.
இது மிகப்.பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயதாகவுள்ளபோதும் ஓர் மறைக்கப்பட்ட உண்மையாகவும் உள்ளது.
இதேநேரம் முதலமைச்சராக தேர்வாகும் மு.க.ஸ்ராலினோ 70 ஆயிரத்து 580 வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றியீட்டினார்.
தமிழ் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் தவற விடப்பட்ட சந்தர்ப்பங்கள்.
தமிழ் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் 5 முனைப் போட்டியே இடம்பெற்றது. அதாவது தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் ஆகியவற்றுடன், தினகரன் மற்றும் கமலகாசன் ஆகியோர் தலமையிலான கூட்டு போட்டியிட்டது. இதில் இரு திராவிடக் கட்சிகள் தவிர்ந்து திராவிடக் கட்சியில் இருந்து பிரிந்த தினகரன், கமலகாசன்ஆகியோரது அணி நாம் தமிழர் கட்சியுணன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டுருப்பின் குறைந்த பட்சம் 20 ஆசணங்களையாவது வெற்றியீட்டும் வாய்ப்பு வாக்களிப்பு விகிதத்தில் தென்பட்டது. இங்கே வீரம், விவேகம், ஆளுமை, தேசியம் எல்லாம் பேசப்பட்டபோதும் புத்தி சாதுரியம் கைவிடப்பட்டதன் விளைவே பெறுபேறாக தென்பட்டது.
அதாவது தனித் தனியாக போட்டியிட்டபோதே இந்த மூன்று கட்சியிலும் ஐவர் போட்டியில் வந்து தோல்வியுற்றனர். அதிலும் கமலகாசன், தினகரன் போன்றோர் அதிக வாக்கு வித்தியாசங்களில் தோற்கவில்லை.
3வது கட்சியாக நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தியே நாம் தமிழர் கட்சி வாக்குகளை பெற்றது. இது தமிழ் நாட்டில் மாற்று அரசியலை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனை அல்லது புதுமுக வாக்காளர்கள் தேசியத்தை கவர்ந்து நிற்கின்றனர் என்பதன் வெளிப்பாடு. இருப்பினும் பெற்ற வாக்குகள் 5 வீகிதம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டுத் தேர்தலில் உதயநிதி ஸ்ராலினைத் தவிர எந்த நடிகரும் வெற்றியீட்டவில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல திரைப்பட நட்சத்திரங்கள் போட்டியிட்டாளும் உதயநிதி ஸ்ராலினைத் தவிர எவருமே வெற்றியீட்டி முடியவில்லை. உதயநிதி அரசியல் பின்னணி கொண்டவர். ஏனையோர் தனியே திரைப்பட பின்னணி கொண்டவர்களாகவே காணப்பட்டனர். ( பல திரை நட்சத்திரங்கள் முன்பு வெற்றியீட்டினர் )
மதச் சார்பு கூட்டணியாக சித்தரிக்கப்பட்ட அ.தி.மு.க.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்றது எனக் கூறப்பட்ட முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்று, தேர்தலை சந்தித்தன. அதேபோல் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக் கூட்டணியே மதச் சார்பான கூட்டணி என விமர்சிக்கப்பட்டது. 234 தொகுதியில் 20 தொகுதி மட்டுமே பா.ஜ.கவிற்கு வழங்கியதனால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
இதேநேரம் இருபெரும் திராவிட கட்சிகளுடன் ரி. ரி. வி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான இஸ்லாமிய கட்சி ஆகியவை ஒரு கூட்டணியாகவும், திரை நட்சத்திரம் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்து தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது.
இதன்மூலம் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. பல தொகுதிகளில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்கள் கூட சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிற்கும் 3,998 பேர் வேட்பாளராகள் போட்டியிட்டனர்.
தேர்தல் வரலாற்றில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறமை அறிமுகம் செய்தமையினால் அதிக தபால்மூல வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தல் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியை கைப்பற்றுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு திராவிட அரசியல் ஆளுமைகள் மறைவிற்குப் பிறகு, மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு, மு க ஸ்டாலின் முதல்வராகிறார்.
இந்த தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளர்கள் நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 120 இடங்களில் வெற்றியீட்டியது.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது 15 சுற்றுவரையான வாக்குகளின் எண்ணிக்கைப் படி இவர் 1, 200 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்தே இறுதியில் தோல்வியுற்றார்.
• நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், 30,781 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறார். ஆனால் அக்கட்சி போட்டியிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான வாக்குகளை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இந்தக் கட்சி தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, தங்களுடைய கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டதுடன், ‘அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி’ என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதேநேரம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ரி.ரி. வி தினகரன் 33,127 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இவ்வாறெல்லாம் உச்சம் பெற்ற தேர்தரின் முடிவின் பிரகாரம் தேசிய கட்சிகள் தனித்து ஆசணத்தை பெற முடியாத நிலமையில் தமிழக கட்சிகளின் தயவில் அதிக ஆசணத்தை பெறுவதும் தமிழ் நாட்டில் மீண்டும் தேசிய கட்சிகள் நிலையெடுக்கவும் வழி ஏற்படுத்தும் இது தமிழ் நாட்டில் ஆழ வேரூண்டுமானால் அங்கும் ஈழத்தின் நிலமையே ஏற்படும்.