கிளிநொச்சி மணியன்குளம் பகுதியில் வசிக்கும் 50 வறியநிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள்,பூமணி அம்மா அறக்கட்டளையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய,பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப் பணியாக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்று (ஜனவரி 9)வழங்கி வைக்கப்பட்டன.
அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் திரு.விசுவாசம் செல்வராசா (பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்னம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், நிர்வாகசபை உறுப்பினர்களான பொறியியலாளர் சா.தவசங்கரி,ஓய்வு நிலை வங்கி முகாமையாளர் ய.தேவதாஸ் ஆகியோரால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில், மணியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் செ.கருணாகரன்,செயலாளர் ந.டெனீஷ்ராஜன், பொருளாளர் வி.தினேஷ், கணக்காய்வாளர் ஆ.கேதீஷ்வரன், நிர்வாகசபை உறுப்பினரான செ.தயாகரன்,உற்பத்தியாளர் சங்க பொருளாளர் அ.மேரி கொண்சப்ரா, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் தி.விநோதினி, உப செயலாளர் த.மஞ்சுளா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து, உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்.