கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் அந்நாட்டு மத்திய வங்கி விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக சில காலமாகவே மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வந்தது.
இந்த நிலையில், இன்றைய மத்திய வங்கி வட்டி வீதம் தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டது.
இதில் வட்டி வீதங்களில் மாற்றம் எதுவுமில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, வங்கி வட்டி வீதம் 4.5 வீதமாக தொடர்ந்தும் நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்வுகூறப்பட்டதனை விடவும் சாதகமான நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆண்டில் 1.4 % பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5 வீதமாக காணப்பட்டதுடன், இந்த ஆண்டு நடுப் பகுதியில் இது 3% மாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்கி வட்டி வீதம் தொடர்பில் மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.