தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு நடந்த முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது. அவ் ஆசனத்தினை யாருக்கு வழங்குவது என்பது குறித்த சர்ஜைகள் பல்வேறு கோணங்களில் பேசப்பட்டது
ஏற்கனவே சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சம்மந்தனை நேரில் சந்தித்து அம்பாறை மாவட்டட பிரதிநிதியாக கலையரசன் அவர்களுக்கு வழங்கத் தீர்;மானித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆயினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு தெரியாது இரகசியமாக வழங்கியது பிழை எனக்கூறிக் கொண்டதுடன் மாவை சேனாதிராஜா அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது
இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் பெரும் களபரேமே இடம் பெற்றது ஆயினும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேலாக இன்று வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலில் கலையரசனின் பெயரே சிபார்சு செய்யப்பட்டுள்ளது
இவ்விடயத்தால் தற்போது தமிழரசுக்கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் காணப்படுவதால் எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகள் உருவாகுதோ எனும் அச்சம் தற்போது மக்களிடத்தில் தோன்றியுள்ளது.