ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாளருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை வேலணை வங்களாவடிப் பகுதியில் இரு கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இந்நிலையில் இரு குழுயினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதளாக மாறியுள்ளது.
இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்