தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிவதாக தனது முகநூலில் தவிசாளர்அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
கடந்த வாரம் புத்தூர் பகுதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பெயர் பலகையினை வலி கிழக்கு பிரதேச சபை அகற்றியிருந்தது.
இதற்கு எதிராக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டதற்கிணங்க குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது