Wednesday, December 7, 2022

வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

Must Read

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்று (October 09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிணற்றில் இருந்து இன்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோணியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img