வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சில சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் படி:
- மருத்துவர் ஆர். முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மருத்துவர் ஜி. சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு மருத்துவமனை பணிப்பாளராகவும்,
- மருத்துவர் டி. வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
- மருத்துவர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ. வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
- திருமதி பி.எஸ்.என். விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
- மருத்துவர் என்.சி.டி. ஆரியரட்ண வவுனியா பொது மருத்துவமனை பணிப்பாளராகவும்,
- மருத்துவர் டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
- மருத்துவர் எம்.எச்.எம். அசாத் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை பணிப்பாளராகவும்,
- மருத்துவர் டபிள்யூ.கே.சீ.பீ. வீரவத்த கிளிநொச்சி பொது மருத்துவமனை பணிப்பாளராகவும்,
- மருத்துவர் டி.எம்.ஏ.கே. திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
- மருத்துவர் எஸ்.என்.வீ. பிரேமதாச முல்லைத்தீவு பொது மருத்துவமனை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் மார்ச் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.