Wednesday, December 7, 2022

கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்தியாவில் நடந்த சோகம்!

Must Read

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி பாஸ்கர் – சந்திரமோகனா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது.

இதையடுத்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் மாதம் தாய் காந்திமதியுடன், சந்திரமோகனாவும் பாஸ்கரனும் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் மூலம் சந்திரமோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சந்திமோகனாவால் சொந்த நாட்டுக்கு திரும்பமுடியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் கணவர் பாஸ்கரன் கடந்த மார்ச் மாதம் இலங்கை சென்றுவிட்டார். ஆனால் நானும் என் தாயும் போதிய நிதி வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். 8 மாதம் கர்ப்பணியாகி விட்டால் விமானத்தில் பயணிக்க முடியாது.

எனவே என்னை உடனடியாக தமிழக அரசும் இலங்கை அரசும் இணைந்து என்னை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் பேசியதோடு இருவரும் சொந்த நாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img