எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்தன. இதில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு நேற்று (ஒக் 11) நண்பகலுடன் முடிவடைந்த நிலையில், அவை தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.