யாழ்.பருத்துறை – கட்டைக்காடு வீதி புனரமைப்பு பணியில் கனரக வாகன சாரதியாக பணியாற்றிய ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அவருடன் சுமார் 80 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பருத்துறை – கட்டைக்காடு வீதியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளில் கனரக வாகன சாரதியாக பணியாற்றும் ஒருவர் அண்மையில் தென்பகுதிக்கு சென்று திரும்பியிருந்த நிலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார். இதனையடுத்து அவரும், அவருடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்