நாட்டில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கட சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் மாரவில பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் பெண் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.