Wednesday, December 7, 2022

முன்னாள் போராளி தாக்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Must Read

கிளிநொச்சி – திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், இறுதிப்போரில் கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் வசித்த வந்த வீடும் உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து மரணித்த எனது மூன்று சகோதரர்களில் ஒருவர் வாங்கிய காணியில்தான் நான் வசித்து வந்தேன்.

அரசியல் பின்புலத்தில் தொடர்ச்சியாக குறித்த காணியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் நான் தொடர்ச்சியாக குறித்த காணியில் வசித்து வந்தேன்.

அவ்வவ்போது மாத்தளையிலிருந்து காணியை இயக்கத்திற்கு விற்பனை செய்துவிட்டு சென்றவர் என ஒருவரை வைத்து எனக்குக் கடும் நெருக்கடி கொடுப்பட்டது.

இந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி பொலிஸாரின் ஆதரவுடன் சிலர் நான் குடியிருக்கும் காணிக்குள் நுழைந்து வேலியைப் பிரித்து எறிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது நான் எதிர்த்து நின்றேன்.இதன்போது நான் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளேன். எனது வீட்டு உடமைகள் வீதியில் எறியப்பட்டுள்ளன.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img