மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைய மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத மின்சார கட்டணங்களை பிப்ரவரி மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தவும், பணம் செலுத்துவதற்கு 2 மாத கால அவகாசம் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்தார்.
அதன்படி நுகர்வோர் பெப்ரவரி மாத கட்டண தொகையையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.