மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் விடைபெற்றனர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமதுகடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன்இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்புஅதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கைஎடுத்தது.

இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புஅதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதானபாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம்முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

Share this Article