அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (மார்ச் 12) நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளது.
நேற்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கும் அதற்கான எதிர்ப்பாகவும் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் பெயரில், இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலைநிறுத்தம் இன்று (மார்ச் 12) காலை 8 மணி முதல் நாளை (மார்ச் 13) காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும்.
இருப்பினும், அவசர சிகிச்சை சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தொடரும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வேலைநிறுத்தம் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை வைத்தியசாலைகளுக்கு பொருந்தாது எனவும் அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.