Thursday, December 1, 2022

மரக்கடத்தல், மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்

Must Read

முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல், மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களான குமணன் தவசீலன் ஆகியோர் மரக்கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடகவியலாளர்களை தாக்கிய கடத்தல் காரர்கள் அவர்களை மிரட்டி “தாங்கள் திருடுவதற்கு தான் இங்கு வந்தோம்” என்று ஊடகவியலாளர்களை பேசவைத்து
அதனை தமது கைத்தொலைபேசியில் காணொளியாக்கியிருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும் மர கடத்தல் காரர்கள் அழித்துள்ளார்கள். ஏற்கனவே பல தடவை இவ்வாறான அச்சுறுத்தல்களை குறித்த இரு ஊடகநண்பர்களுக்கும் மர கடத்தல் கார்ர்களால் விடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரும், அங்குள்ள அரசியல் வாதிகளும் கண்டும் காணாமலும் இருந்ததன் விளைவு இரு ஊடகவியலார்களை தாக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

மரக்கடத்தல் காரர்கள் மீது சித்திரவதை, திருட்டு, காடழிப்பு, ஊடக அடக்குமுறை ஆகிய குற்றச்சட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img