நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் இன்று (ஒகஸ்ட் 05) முறையாக வாக்களிப்பது எவ்வாறு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெளிவூட்டினார்.
? நீங்கள் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு முன்பான புள்ளடியிடுங்கள்(✖️). வேறு குறியீடுகளை இட வேண்டாம்.
? ஒன்றை விட அதிக புள்ளடிகள் (✖️) இருந்தால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.
? விருப்பு இலக்கங்களுக்கு வாக்களிக்க விரும்பினால், உதாரணமாக 71 ஆம் இலக்கத்திற்கு வாக்களிக்க விரும்பினால் 71 ஆம் இலக்கத்தின் மீது புள்ளடியிடுங்கள் (✖️).
? நீங்கள் இன்னுமொரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த இலக்கம் 81 ஆக இருந்தால் 81 ஆம் இலக்கத்தின் மீது புள்ளடியிடுங்கள்.
? உங்களுக்கு இன்னுமொருவருக்கு வாக்களிக்க முடியும். அந்த இலக்கம் 91 ஆக இருந்தால் அந்த இலக்கத்தின் மீது புள்ளடியிடுங்கள்(✖️).
? ஆகக் கூடுதலாக மூவருக்கே உங்களால் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.
? ஒருபோதும் உங்கள் விருப்பு வாக்குகளை மூவரை விட அதிகமானவர்களுக்கு அளிக்க வேண்டாம்.
? விருப்பு வாக்குகளை அளிக்காவிட்டாலும் உங்கள் வாக்கு நிராகரிக்கப்பட மாட்டாது. எனினும், கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுவிற்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்குகளை மாத்திரம் அளித்தால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.
? முதலில் வாக்கையும் இரண்டாவதாக விருப்பு வாக்கையும் அளிக்க வேண்டும்.