நெடுந்தீவு சண் மலர் அறக்கட்டளை – கனடா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தில் கல்விசார் செயற்திட்டம் இன்றையதினம் (செப். 26) நெடுந்தீவு கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று உயர்தர பாடசாலைகளிலும் ஆரப்பித்து வைக்கப்பட்டது.
நெடுந்தீவில் உள்ள மகாவித்தியாலயம், றோ. க மகளிர் கல்லூரி, சைவப்பிரகாசவித்தியாலயம் ஆகிய மூன்று உயர்தர பாடசாலைகளில் கல்வி பொது சாதாரணதரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களிற்கும், NBPC இனால் வெளியிடப்பட்டகற்றல் முன்னோடி பயிற்சி தொகுப்பு புத்தகத்தினை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதன்அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோருடன் நெடுந்தீவு ஊரும் உறவும்நிறுவனத்தின் தலைவர், இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு 07 மாணவர்களிற்கான கற்றல் தொகுப்பினை வழங்கி வைத்துள்ளனர்.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வித்தியாலய பிரதி அதிபர், நெடுந்தீவு ஊரும் உறவின் தலைவர் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவின்நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு 24 மாணவர்களிற்கான கற்றல் தொகுப்பினை வழங்கி வைத்துள்ளனர்.
நெடுந்தீவு றோ. க மகளிர் கல்லுாரியில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் தரம் 11 வகுப்பாசிரியருடன் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் தலைவர், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு 14 மாணவிகளுக்கு இந்த கற்றல் மொகுப்பினை வழங்கிவைத்தனர்.
மூன்று பாடசாலைகள் சார்பிலும் ஊரின் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு இந்த செயற்திட்டத்தை வழங்கிய சண் மலர் அறக்கட்டளையினருக்கும், பணியினை முன்னெடுக்க உதவிய நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்திருந்ததுடன் பாடசாலையில் உட்கட்டுமான தேவைகள் இருப்பதாகவும் வகுப்பறைகள் கற்றல் நிலைக்கு ஏற்ற வகையில் உருவாக்க அறக்கட்டளைகள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கையினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
நெடுந்தீவு சண் மலர் அறக்கட்டளை- கனடா நிறுவன நிறுவுனரின் மனைவியின் நினைவாகவே கற்றல் தொகுப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.