2020ம் ஆண்டுக்கான பாரளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரச்சார பணிக்காக இன்று அணலைதீவுக்கு சென்று மக்களின் குறை நிறைகளை அறிந்து அதற்காக தீர்வுகளை வழங்கி வருகின்றார் வடக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட எழுதாரகை படகு நீண்ட நாட்களாக சேவையில் ஈடுபடாது துறைமுகத்தில் தரித்து நிற்பதால் போக்குவரத்து செய்வது கடினமாக காணப்படுவதாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கையினை உடனடியாக மேற்கொண்டார். அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு சரச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த படகு நீண்ட காலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன், சிலருக்கு கால் முறிவு போன்ற காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அனலைதீவு பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம், குறித்த படகை அப்புறப்படுத்தி தருமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இச் சந்திப்பில் தீவக வேட்பாளர் மருதையினார் காந்தன் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் சகிதம் சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் குழவினர் பல்வேறு மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.