தனியார் கல்வி நிலையங்களும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன
பாடசாலைகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைவாக தனியார் கல்வி நிலையங்கள் குறித்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை தொடர்பு கொண்ட போது தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிப்பிப்பது குறித்து துறைசார் திணைக்களங்களில் இருந்து தகவல்கள் எதுவும் தனக்கு வரவில்லை எனத் தெரிவித்ததுடன் ஆயினும் பாடசாலைகள் ஆரம்பிப்பது மேலும் ஒரு வாரத்திற்கு பின்போடப்படுவதன் அடிப்படையில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும மேலதிக வகுப்புக்கள் யாவும் தற்போது ஆரம்பிக்க முடியாது எனவும் பாடசாலை ஆரம்பத்தினை மையப்படுத்தியே அவற்றினை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையங்களும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன
