Thursday, December 1, 2022

தனியார் கல்விக்கு இன்னும் அனுமதியில்லை.

Must Read

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் முன்றாம் தவணைக்காக நாளை ஆரம்பிக்கப்படவுள்ள போதும் தனியார் கல்வி நிலையங்களுக்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்டச் செயலர் கே.மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை திட்டமிட்டபடி அரச மற்றும் தனியார் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை. தேசிய மட்டத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவற்றுக்கான அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img