முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பிரதேசத்தில் தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் போதே 5 வயது சிறுமி மீது அவரது தந்தையினால் சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.